சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவர் மனைவி பாண்டியம்மாள் (38)., பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த சில தினக்களாக இவர்களது வீடு பூட்டியே இருந்தது. வீட்டின் உரிமையாளர் சீனிராஜிடம் கேட்டபோது பதிலேதும் கூறாமல் வெளியே சென்றாராம்.
உடனே விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பாண்டியம்மாள், அவரது மகள்கள் பரிமளா, பவித்ரா, சினேகா ஆகிய 4 பேரும் இறந்துகிடந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.