தமிழக பள்ளியில் 3D தொழில்நுட்பத்துடன் கல்வி

ஞாயிறு, 20 நவம்பர் 2016 (18:41 IST)
தமிழத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள 3D தொழில் நுட்பம் கொண்ட புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


 

 
TN Schools Live என்ற மொபைல் செயலியை, தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கியுள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள 3D தொழில் நுட்பம் கொண்ட இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 
இதில் மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடக்குறிப்புகள், 3டி தொழில்நுட்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் தங்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவும். லேப்டாப், கம்யூட்டர், டேப்லேட், மொபைல் போன்றவற்றில் இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
இணைய வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெறும் வகையில் இதை குறுந்தகடுகளிலும் பதிவேற்றப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்