3 நாட்கள் டாஸ்மாக் லீவ்.. மொத்தமாக சரக்கை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்! – ஒரு நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

Prasanth Karthick

வியாழன், 18 ஏப்ரல் 2024 (09:02 IST)
மக்களவை தேர்தல் காரணமாக மதுக்கடைகள் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் பலரும் முதல் நாளே மதுபானங்களை வாங்கிக் குவித்துள்ளனர்.



தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்கான அரசியல் கட்சி பிரச்சாரங்களும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் மதுபானக்கடைகளை 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக மதுபானக்கடைகள் மூடப்படும் அறிவிப்பு வெளியானாலே மதுப்பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்து விடுவார்கள். விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து மதுபானத்தை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வார்கள். சிலர் மொத்தமாக வாங்கி ப்ளாக்கிலும் விற்கவும் செய்வார்கள்.

ALSO READ: அனைத்து மகளிர்க்கும் உரிமைத் தொகை வழங்க மறுக்கும் திமுக அரசு-ஆர்.பி உதயகுமார் ஆவேச பேச்சு!

தற்போது 3 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் மூடப்பட்டிருக்கும் என்பதால் 16ம் தேதியே மதுப்பிரியர்கள் டாஸ்மாக்கி படையெடுத்துள்ளனர். விரும்பிய மதுபானங்களை பல பாட்டில்கள் வாங்கி சென்றுள்ளனர். இதனால் வழக்கத்தை விட 16ம் தேதி மட்டும் இரு மடங்கு டாஸ்மாக் விற்பனை உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 16ம் தேதியி மட்டும் மொத்தமாக ரூ.289 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடிக்கும், திருச்சியில் ரூ.58.65 கோடிக்கும், சேலத்தில் ரூ.57.30 கோடிக்கும், மதுரையில் ரூ.55.87 கோடிக்கும், கோவையில் ரூ.49.10 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்