டாஸ்மாக் மது வகைகள் இன்று முதல் விலை உயர்வு! – அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

Prasanth Karthick

வியாழன், 1 பிப்ரவரி 2024 (09:38 IST)
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு வகையான மதுபானங்கள் விற்கப்பட்டு வரும் நிலையில் மதுப்பிரியர்களின் விருப்ப பானமான பிராந்தி குவார்ட்டர் ஒன்று ப்ராண்டை பொறுத்து குறைந்தது ரூ.180ல் இருந்து விற்பனையாகி வருகிறது.

முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் சமீப காலமாக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட போவதாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

ALSO READ: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

அதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் சாதாரண மற்றும் நடுத்தர குவாலிட்டி மது வகைகள் 180 மி.லி (குவாட்டர்) அடக்க விலையுடன் ரூ.10 உயர்த்தப்படுகிறது. உயர்தர குவாலிட்டி மதுபானங்களுக்கு குவார்ட்டருக்கு ரூ.20 உயர்த்தப்படுகிறது. அதுபோல பீர் பாட்டில்களுக்கும் ரூ.10 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மதுபான விலை உயர்வு மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சில டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்கும் நிலையில் தற்போது விலை உயர்த்தப்பட்ட மதுபான ரகங்கள், மாற்றப்பட்ட விலை பட்டியலை டாஸ்மாக் கடைகளில் முறையாக வைக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்