25 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு - எங்கெங்கு தெரியுமா?

வெள்ளி, 17 ஜூன் 2022 (14:13 IST)
தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். 

 
தமிழ்நாட்டில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் ஜூன் 19 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
அதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்