தமிழ்நாட்டில் 2495 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன - அமைச்சர் தகவல்
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (15:57 IST)
இந்தியாவிலேயே அதிகக் கல்லூரிகளின் எண்ணிக்கையில், தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதாக, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் 2495 உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2011 மே மாதத்திலிருந்து இது வரை 53 கல்லூரிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.