234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள்: விசிக தலைவர்திருமாவளவன் திட்டம்..!

Mahendran

வியாழன், 25 ஜூலை 2024 (11:10 IST)
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 144 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் கட்சியை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் முக்கியமாக 234 தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் பெயர் அறிவிக்கப்படும் என்றும் நவம்பர் மாதத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முழுமையான கட்சி நிர்வாகம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் 2026 தேர்தலில் 234 மாவட்ட செயலாளர்கள் களத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி திருமாவளவன் பிறந்தநாள் வருவதை அடுத்து மது போதை ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளை ஒரு மாத காலத்திற்கு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்