நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!
புதன், 4 மே 2022 (07:45 IST)
நேற்றைய அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!
நேற்று அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனை ஆனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் தமிழர்கள் மத்தியில் உள்ளது என்பதும் இதனை அடுத்து அட்சட திருதியை அன்று அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நகை கடைகள் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று அனைத்து நகைக் கடைகளிலும் கூட்டம் குவிந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது