தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா - அமைச்சர் தகவல்!

புதன், 8 ஜூன் 2022 (15:39 IST)
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,56,317 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 79 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 என்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,769 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 
 
இதனால் தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் 12 ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து கூறியதாவது, கொரோனா வைரஸ் நோய் தொற்று இந்தியாவில் 41 சதவீதமாக தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வரும் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்