30 வயது பெண்ணிடம் அத்துமீறிய 16 வயது இளைஞன் –கடலூரில் பரபரப்பு !

செவ்வாய், 17 மார்ச் 2020 (08:49 IST)
கடலூர் மாவட்டத்தில் வீட்டில் கழிப்பிடம் இல்லாததால் மறைவான பகுதிக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளான் 16 வயது இளைஞன்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரின் பெரியார் நகரில் வசித்து வருகிறார் 29 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில் வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் அவர் திறந்தவெளிகளில்தான் இயற்கை உபாதைகளுக்காக மறைவானப் பகுதிகளுக்கே செல்ல வேண்டி வந்துள்ளது.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக அவர் இதுபோல இயற்கை உபாதையைக் கழிக்க சென்ற போது 15 வயது சிறுவன் ஒருவன் அவரை வழிமறித்துள்ளான். பின்னர் சற்றும் எதிர்பாராத விதமாக அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் அவனிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடியுள்ளார்.

வீட்டில் கணவனிடம் இதுபற்றி சொல்ல, உடனடியாக அந்த சிறுவன் மேல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த போலிஸார் அவரைக் கைது நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்