கேள்வித்தாள் மிக எளிதாக இருந்தது: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி..!

Siva

வெள்ளி, 1 மார்ச் 2024 (15:31 IST)
பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் கேள்வித்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக கூறியுள்ளனர்.

இன்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் நாள் மொழிப்பாடம் அதாவது தமிழ் தேர்வு நடைபெற்றது.

சற்றுமுன் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி முடித்து வெளியே வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய போது ’கேள்வித்தாள் மிகவும் எளிதாக இருந்ததாகவும் ஒரு மதிப்பெண் இரண்டு மதிப்பெண் நான்கு மதிப்பெண் ஐந்து மதிப்பெண் கேள்விகள் எல்லாம் ஈசியாக இருந்ததாகவும் நாங்கள் படித்த எல்லாமே வந்திருந்தது என்றும் தெரிவித்தனர்.

அதேபோல் ஆசிரியர்கள் முக்கியமான கேள்விகள் என குறிப்பிட்ட கேள்விகள் அனைத்தும் வந்திருந்தது என்றும் நாங்கள் கூட கஷ்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் கேள்வித்தாள் மிகவும் எளிதாக இருந்ததால் கண்டிப்பாக 90 மதிப்பெண்களுக்கு மேல் எங்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இதேபோல் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் உள்பட அனைத்து கேள்வித்தாள்களும் எளிதாக இருந்தால் கண்டிப்பாக நாங்கள் 90% மதிப்பெண்கள் எடுத்து விடுவோம் என்றும் மாணவர்கள் நம்பிக்கை உடன் தெரிவித்தனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்