தமிழகத்தில் 11 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்

புதன், 12 ஏப்ரல் 2017 (00:59 IST)
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், ஒழுங்கு நடவடிக்கைக்காகவும் விருப்பத்தின் பேரிலும் அவ்வப்போது காவல்துறை உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது  தமிழகம் முழுவதும் 11.டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  டி.ஜி.பி.,ராஜேந்திரன் சற்றுமுன்னர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி மாற்றப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:


 




1. தி.நகரில் பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் அம்பத்தூருக்கு மாற்றப்பட்டார்.

2. தி.மலையில்டி.எஸ்.பியாக பணி புரிந்து அழகேசன் சென்னை மாநகர உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

3. மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த வந்த வின்சென்ட் ஜெயராஜ் சென்னை அசோக் நகருக்கு மாற்றப்பட்டார்.

4. அம்பத்தூரில் பணி புரிந்து வந்த ஏ.பி செல்வன் தி.நகருக்கு மாற்றப்பட்டார்.

5. சென்னை அசோக்நகரில் பணிபுரிந்து வந்த ஹரிகுமார் வணிகவரித்துறைக்கு மாற்றப்பட்டார்.

6. மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்துவந்த ரவிச்சந்திரன் ராஜபாளையம் டி.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டார்

7. சென்னை மாநகர துணை ஆணையராக பணி புரிந்து வந்த ராஜேந்திரன் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டார்.

8. கோட்டூர் புரத்தில் பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் வில்சன் பூந்தமல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார்

9. பூந்தமல்லியில் பணிபுரிந்து வந்த முத்தழகு எழும்பூருக்கு மாற்றப்பட்டார்.

10. சென்னை புலனாய்வு பிரிவில் பணி புரிந்து வந்த ராஜ காளியப்பன் மாதவரம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

11. எழும்பூரில் பணிபுரிந்து வந்த பிரகாஷ் சேலம் எஸ்.சி . எஸ்.டி விஜிலென்ஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

மேலும் அழகேசன் என்ற காவலர் சமுதாய நலன் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்