தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

செவ்வாய், 10 மே 2022 (13:03 IST)
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

 
இந்தியாவில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது இன்று இரவு வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி காஞ்சிபுரம், தி.மலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாம். 
 
சென்னையில் 2 நாட்களுக்கு விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்