10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண்! – தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:47 IST)
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் முன்னதாக வெளியான நிலையில் அசல் மதிப்பெண் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ஆல்பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை ஆன்லைனில் பிரிண்ட் எடுத்து அட்மிசன் பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

தற்போது அசல் மதிப்பெண்களை அக்டோபர் 4 முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்