போலீஸார் போல் நடித்து தொழிலதிபரிடம் ரூ.50 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம கும்பல்

சனி, 10 அக்டோபர் 2015 (11:56 IST)
கோவையில் போலீஸார் போல் நடித்து தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ. 50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் சைனேஷ். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் தொழிலுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க கோவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ராஜேஷை சந்திக்க சென்றனர். சைனேசுடன் அவருடைய நண்பர்கள் கனகராஜ், சஞ்சீவ், ரவி, சார்ஜித் ஆகிய ஐந்து பேரும் காரில் திருச்சி சென்றனர். அவர்களை சந்தித்த ராஜேஷ், "திருச்சியை விட கோவையிலேயே விலை குறைவாக பொருட்களை வாங்கலாம்  எனக்கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.

இவர்கள் சென்ற கார் வெள்ளக்கோவில் அருகிலுள்ள பகவதிபாளையம் அருகே சென்றபோது ஜீப்பில் வந்த போலீஸ் உடை அணிந்த சிலர் சைனேஷ் வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் காரை சோதனையிடுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டனர். இதைதொடர்ந்து சைனேஷ் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் தங்களை போலீஸார் எனக்கூறி ஏமாற்றி பணத்தை எடுத்துச் என்றது தெரியவந்தது.

பின்னர் அவர் வெள்ளக்கோவில் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்