முல்லைப் பெரியாறு அணையை பல‌ப்படு‌த்தலா‌ம் - பிரதமரு‌க்கு அப்துல் கலாம் கடிதம்

செவ்வாய், 13 டிசம்பர் 2011 (13:58 IST)
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம் எ‌ன்று ‌பிரதம‌ர் ‌ம‌ன்மோக‌‌ன் ‌சி‌‌ங்கு‌க்கு மு‌ன்னா‌ள் குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல்கலாம் யோசனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக பிரதமரு‌க்கு அவ‌ர் எழுதியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப் பாடுகளையும், பராமரிப்பையும் இராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சனையால் இரு மாநில உறவும் ாதிக்கப்பட்டு விடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் எ‌ன்று கடிதத்தில் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்