ப‌திவு மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் ஆ‌சி‌ரிய‌ர் தே‌ர்வு: ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்

ஞாயிறு, 4 செப்டம்பர் 2011 (17:42 IST)
ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்புவத‌ற்கு போ‌ட்டி‌த் தே‌ர்வு மூல‌ம் தே‌ர்வு செ‌ய்யாம‌ல், ஆ‌சி‌ரிய‌ர் ப‌திவு மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் தே‌ர்வு செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று பா.ம.க.‌ ‌நிறுவன‌ர்‌ ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு:

தமிழகத்தில் 17,387 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும், பள்ளிகளில் காலியாக உள்ள 14,377 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி 48,313 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2010 டிசம்பர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1,22,000 முதுநிலை பட்டதாரி ஆசியர்கள் உள்ளிட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

எனவே அவர்களின் நலன் கருதி போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யாமல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்