தூத்துக்குடி உ‌ள்பட 4 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் புதிய பொறியியல் கல்லூரிகள்

செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (10:46 IST)
தமிழபட்ஜெட்டினமுக்கிஅம்சங்கள்:

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒது‌க்‌கீடு.

தமிழகத்தில் மேலும் 30 கூட்டுகுடிநீர் திட்டம்; ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஏப்ரலில் முடிவடையும்.

கோவை மாவட்டத்தில் ரூ.175 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம்.

சென்னை மத்திய சிறைச்சாலையில் ரத்த வங்கி அமை‌க்க‌ப்படு‌ம்.

சாலை மேம்பாடு மற்றும் பாலப்பணிகளுக்காக ரூ.3,087 கோடி ஒதுக்கீடு.

3,500 புதிய பேருந்துகள் வாங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

பின்தங்கிய மாவட்டங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

அரசு மருத்துவமனையில் மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.54 கோடி ஒதுக்கீடு.

திருவண்ணாமலை, தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் புதிய பொறியியல் கல்லூரிகள்.

தமிழகம் முழுவதும் ரூ.78 கோடியில் 27 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்