தி.நகர் கடைகளைத் திறக்க மேலும் 8 வாரத்திற்கு அனுமதி

வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (11:18 IST)
சென்னை தியாகராநகரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறக்க மேலும் 8 வாகாலத்துக்கு அனுமதியை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் சீலிடப்பட்டன. இதஎதிர்த்து வணிகர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களபண்டிகை காலத்துக்காக 6 வாரங்களுக்கு திறக்க அனுமதி அளித்திருந்தது. தற்போது அந்த அனுமதியை மேலும் 8 வாரகாலத்துக்கு நீட்டித்து சென்னஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை மீறிய கட்டடங்களஅனுமதிக்க சில நிபந்தனைகளுடன் நீதிபதி மோகன் குழு பரிந்துரைத்துள்ளது. 2007- ஜூலைக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மோகன் குழு சலுகைகளஅளித்துள்ளது. மோகன் குழுவின் பரிந்துரையை பரிசீலீக்க அரசுக்கஉயர்நீதிமன்றம் 6 வாரம் அவகாசம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்