திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

செவ்வாய், 1 டிசம்பர் 2009 (18:18 IST)
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவம் இன்று மாலை நடைபெற்றது.

சுமார் 6 மணியளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, அண்ணாமலையார் கோயிலின் அர்ச்சகர் மலை உச்சிக்கு பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்துச் சென்று மகா தீபத்தை ஏற்றி வைத்தார்.

மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சியை பல லட்சக்கணக்கானோர் நகர் முழுவதும், சுற்றுவட்டாரங்களிலும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் அண்ணாமலையானுக்கு அரோகரா என கோஷமிட்டபடியே வழிபட்டனர்.

மகா தீப நிகழ்ச்சியையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மகா தீபம் ஏற்றப்பட்ட பின், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் சமேதராக வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்