டி.ஜி.பி. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

வெள்ளி, 17 ஜூலை 2009 (11:03 IST)
த‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் (ி.ி.ி) கே.பி.ஜெயின், சேலம் மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் மயில்வாகனன் ஆகியோர் மீது ச‌ெ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் அவம‌தி‌ப்பு வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சேலம் ஆயுதப் படை‌யி‌ல் பணியாற்றும் ராமசாமி உட்பட 10 காவலர்கள், உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வீரப்பன் தேடுதல் வேட்டையில் நாங்கள் ஈடுபட்டோம். 2004ல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, 2ம் நிலைக் காவலர்களான எங்களுக்கு முதல்நிலைக் காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

2007ல் தலைமை காவலராக பதவி உயர்வு பெற்றோம். ஆனால், 2008ல் மீண்டும் முதல்நிலை காவலர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டோம். சேலம் மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் மயில்வாகனன் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினோம்.

இந்த தடையை ரத்து செய்ய கோரி மாவ‌ட்ட க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் தாக்கல் செய்த மனு ‌நிராக‌ரி‌க்க‌ப்பட்டது. ஆனாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத த‌மிழகாவ‌ல்துறதலைமஇய‌க்குன‌ர் கே.பி.ஜெயின், சேலம் மாவ‌ட்காவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ம‌யி‌ல்வாகன‌ன் ஆ‌கியோ‌ர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டு‌ம் எ‌ன்று மனு‌வி‌ல் கூறியிருந்தனர்.

இ‌ந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்