ஜெயலலிதா மீது விஜய்காந்த் குற்றச்சாட்டு

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2009 (15:42 IST)
தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க. முடிவெடுத்ததையடுத்து, தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த், ஜெயலலிதா தனது சுய நலத்திற்காகவே தேர்தலை புறக்கணிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் கோவை வந்திறங்கிய விஜய்காந்த் அங்கு தொண்டா முத்தூர் தொகுதி இடைத் தேர்தல் நிலவரங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது ஜெயலலிதா சுய நலம் காரணமாகவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், அவர் கூறுகையில், மக்களின் பிரச்சனைகளான விலை வாசி உயர்வு, மற்றும் சில பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.

இடைத் தேர்தலை அ.இ.அ.தி.மு.க. புறக்கணித்திருக்கக் கூடாது, எதிர்கட்சியான அவர்கள் மக்களுக்காக போராடியிருக்கவேண்டும். திருமங்கலத்தில் நடந்தது போன்று இந்த இடைத் தேர்தலிலும் எல்லாம் நடக்கத்தான் செய்யும், இந்த இடைத் தேர்தல் தி.மு.க.வால் வரவழைக்கப்பட்ட தேர்தல். ஆளுங்கட்சியை விரும்பாத மக்கள் நல்ல கட்சிக்கு வாக்களியுங்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார் விஜய்காந்த்.

வெப்துனியாவைப் படிக்கவும்