ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் உரை: முக்கிய அம்சங்கள்

செவ்வாய், 8 ஜூலை 2014 (20:36 IST)
புது தில்லி, ஜூலை 08, 2014

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, 2014 ஜூலை 8 அன்று மக்களவையில், புதிய மத்திய அரசின் முதல் ரெயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு
  
அவைத் தலைவி அவர்களே,
 
இந்தியன் ரயில்வே 12,617 ரயில் வண்டிகள் வழியாக 23 மில்லியன் பயணிகளை ஒவ்வொரு நாளும் பயணிக்க வைக்கிறது. இது ஆஸ்திரேலியா நாட்டின் மக்கள் தொகைக்கு சமமானது. இந்த வண்டிகள் 7,172 நிலையங்களை இணைக்கின்றன. 
 
மூன்று மில்லியன் டன் சரக்கும் இந்தியன் ரயில்வே 7,421 வண்டிகளின் மூலமாக ஒவ்வொரு நாளும் கொண்டு செல்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் போல் ஒரு பில்லியன் டன்னுக்கு மேல் சரக்கு கொண்டு செல்கின்ற நாடு என்ற பெருமைக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. உலகத்தில் மிக பெரிய சரக்கு கொண்டு செல்லும் சேவையாக இந்திய ரயில்வேயை ஊக்கப்படுத்துவதே என்னுடைய நோக்கம்.

 
ஒவ்வொரு நாளும் 23 மில்லியன் பயணிகள் ரயில்வேயைப் பயன்படுத்தும் போதும் ரயிலில் பயணம் செய்யாதவர்களும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். நிலக்கரி சுரங்கங்களையும் துறைமுகங்களையும் இணைத்து பெருமளவு ரயில் வண்டிகள் ஓடும் போதும் ரயில் பாதையே இல்லாத இடங்களும் நம் நாட்டில் நிறைய இருக்கிறது. நம்நாட்டில் சரக்கு போக்குவரத்தில் 31 சதவீதம் மட்டும்தான் ரயில்வே கையாளுகிறது. இவை அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 
 
மிக பெரிய ரயில்வேத் துறை நிறுவனம் வணிக முறையில் இயங்கும் போது நல்வாழ்வு தொண்டு நிறுவனம் போல் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்பது மிக பெரிய மற்றொரு சவாலாகும். தண்டாவாளங்கள் போல் இந்த இரண்டு கொள்கைகளும் சமமாகப் பிரியாமல் இருக்கிறது. 
 
2000-2001இல் மொத்த வருமானத்தில் 9.4 சதவீதமாக இருந்த சேவை செலவுகள் 2010-11 இல் 16.6 சதவீதமாக உயர்ந்தது. 2012-13 இல் இது 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதே வருடம் ரயில்வேத் துறையில் மொத்த முதலீடு 35241 கோடி- அதாவது மொத்த வருமானத்தில் பாதிக்கு மேல் வருகிறது சேவைச் செலவுகள். 
 
ரயில்வே தண்டவாளத்தில் மொத்த நீளம் 1.16 லட்சம் கிலோ மீட்டர், ரயில்வே பெட்டிகளின் மொத்த எண்ணிக்கை 63870, ரயில்வே தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.1 லட்சம். இந்த நிலையில் எரிபொருள், ஊதியம், பென்சன், பராமரிப்பு போன்ற செலவுகளுக்கு மொத்த வரவில் பெரிய ஒரு தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. 2013-14இல் 1,39,558 கோடி ரூபாய் வரவில் 1,30,321 கோடி ரூபாய் செலவிடப்பட்டது - இது 94 சதவீதமாகும். 
 
இந்த அடிப்படையில் கணக்கிடும் போது ஒரு ரூபாயில் 94 பைசா செலவாகிறது. ஆறு பைசா மட்டும்தான் மீதியுள்ளது. இந்த மீதி தொகையும் ரயில்வே கட்டணம் உயர்த்தாமல் இருந்ததால் குறைந்து வந்தது. ரயில்வே பாதுகாப்பு, பராமரிப்பு, விரிவாக்கம் போன்ற செலவுகள் மீதத் தொகையில் இருந்துதான் செலவு செய்ய வேண்டியுள்ளது. 

இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு பயணிகளின் கட்டணம் உயர்த்தாமல் சரக்கு கட்டணம் மட்டும் உயர்த்துவது இதுவரை நடைமுறையில் இருந்தது. அதே சமயம் பயணிகளின் கட்டணம் ரயில்வே செலவைவிட குறைந்துதான் இருந்தது. இந்தக் குறைபாடு 2000ஆம் ஆண்டு பத்து பைசாவாக இருந்தது 2012-13இல் 23 பைசாவாக அதிகரித்துள்ளது. 
 
மறுபக்கம் சரக்கு கட்டணம் அடிக்கடி உயர்ந்துகொண்டே இருந்தது. இந்தக் காரணத்தால் கடந்த முப்பது ஆண்டுகளில் மொத்தம் சரக்கு கையாளுவதில் ரயில்வேயின் பங்கு குறைந்து வந்துள்ளது.
 
முதலீடு செய்வதில் வந்த இடையூறுகளால் கடந்த 30 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட 676 திட்டங்களில் 317 திட்டங்கள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட 99 புதிய ரயில் பாதைகளில் ஒரே ஒரு பாதை மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் போது முன்னுரிமை கொடுப்பதைப் பற்றிச் சரியான நோக்கம் வேண்டும். இரட்டை மற்றும் மூன்று வழித்தடங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இம்மாதிரி வளர்ச்சி, வருமானத்தை அதிகரிக்கச் செய்யும். புதிய ரயில் தடங்கள் வருமானத்தை அதிகப்படுத்தும் என்பது கட்டாயமல்ல. கடந்த பத்து ஆண்டுகளில் 3,738 கிலோ மீட்டர் புதிய வழித்தடங்கள் உருவாக்குவதற்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இரட்டை ரயில் தடங்கள் அமைப்பதற்கு 18,400 கோடி ரூபாய் மட்டும் தான் செலவிடப்பட்டுள்ளது.
 
மீட்பு வழிகள்:
 
இந்த நிலவரத்தில் இருந்து ரயில்வேயை மீட்பதற்குச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதில் ஒன்று கட்டணம் உயர்வுதான். என்றாலும், இந்த உயர்வு வழியாக 8,000 கோடி ரூபாய்தான் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. நான்கு பெருநகரங்களை இணைக்கும் ரயில் பாதை அமைப்பதற்கு மட்டும் ரூ.9 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இந்த நிலைமையில் கட்டணம் உயர்வு மட்டுமல்லாமல் வேறு வழிகள் வகுக்க வேண்டியிருக்கும். 
 
ரயில்வே அமைப்புகளின் அதிக வருமானம், நேரடி அன்னிய முதலீடு, பொது தனியார் பங்களிப்பு போன்ற வளர்ச்சி திட்டங்கள் ரயில்வே வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 

2013-14
 
2013-14 ஆம் ஆண்டு ரயில்வேயின் கட்டண வருவாய் 12.8 சதவீதம் உயர்ந்து 1,39,558 கோடி ரூபாயாகும். இது திட்டமிடலிலிருந்து 942 கோடி ரூபாய் குறைவாகும். வேலை செலவுகள் 97571 கோடி ரூபாயாகும். இது திட்டமிட்டதிலிருந்து 511 கோடி ரூபாய் அதிகமாகும். எதிர்பார்த்திருந்த 7943 கோடி ரூபாய் நீக்கி இருப்பு 4160 கோடி ரூபாய் குறைந்து 3783 கோடி ரூபாயாகும். அதாவது 2013-14 ஆம் ஆண்டில் பயணிகளின் பயணச் சீட்டுகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டதில் குறைவாக இருந்து. செலவுகள் திட்டமிட்டதில் அதிகமாகவும் இருந்தது. 
 
2014-15 
 
2014-15 ஆம் ஆண்டில் 1,64,374 கோடி ரூபாய் வரவும், 1,49,176 கோடி ரூபாய் செலவும் திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு கையாளுவதன் அளவு 4.9 சதவீதம் வளர்ச்சியடையும். மொத்தம் வேலை செலவுகள் 1,12649 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 2013-14 விட 15078 கோடி ரூபாய் அதிகமாகும்.
பயணிகளுக்கான வசதிகள்:
 
ரயில் நிலையங்களில் பொது தனியார் பங்களிப்புடன் பயணிகள் சேவைகள் அதிகரிக்கப்படும். வணிக பயனுக்கா தொடர்ச்சியாக பயணிக்கும் பயணிகளுக்கு இயங்கும் அலுவலகம் என்ற பெயரில் புதியத் திட்டம் உருவாக்கப்படும். ரயில்வே பயணியர் விடுதிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி அனைத்து ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும். ரயில்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களின் தரத்தை உயர்த்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணிகளிடமிருந்தே உணவின் தரத்தை பற்றி விவரங்கள் ஆன்லைன் மூலம் சேகரிக்கப்படும். 
 
தூய்மைப் புரட்சி:
 
ரயில் நிலையங்களை தூய்மையாக வைப்பதற்கு பட்ஜெட்டில் அதிகமாக 40 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். தூய்மையாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் வசதிகள் செய்து தரப்படும். 
 
முன்பதிவு சேவை: 
 
முன்பதிவு சேவையை விரிவாக்குவதற்கு கைபேசி மூலமாகவும், தபால் அலுவலங்கள் மூலமாகவும் முன்பதிவு வசதிகள் செய்யப்படும். ஆன்லைனில் ஒவ்வொரு நிமிடத்திலும் 7,200 டிக்கேட்டுகள் முன்பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்படும். இந்த வசதியின் மூலம் 1,20,000 பேருக்கு ஒரே சமயத்தில் முன்பதிவு செய்யலாம். 

ரயில்களின் வேகம்:
 
முதல் கட்டமாக மும்பை அகமதாபாத் பெரும் நகரங்களுக்கிடையே புல்லட் ரயில் இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெங்குளூரூ சென்னை, சென்னை ஹைதராபாத் உட்பட ஒன்பது வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்கப்படும். 
 
ரயில்களின் நிறுத்தம்:
 
பரிசீலனை அடிப்படையில் ரயில்களுக்கு நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏராளமான விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ரயிலின் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் பரிசீலனை அடிப்படையில் ஏற்படுத்தி இருக்கும் நிறுத்தங்கள் மூன்று மாதம் வரை தொடரும். 
 
ஆய்வுகள்:
 
புதிய ரயில் பாதைகளுக்கு 18-ம் இரட்டை ரயில் பாதைகளுக்கு 10-ம் ஆய்வுகள் இந்த வருடம் மேற்கொள்ளப்படும். மைசூரிலிருந்து கொடகிலே மடிக்கேரி என்கிற சுற்றுலா தளத்திற்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கும் ஆய்வு நடத்தப்படும்.
 
புதிய ரயில் 
 
ஐந்து ஜனசாதாரண ரயில்கள், ஐந்து பிரிமியம் ரயில்கள், ஆறு குளிர்சாதன விரைவு ரயில்கள், 27 விரைவு ரயில்கள், எட்டு பயணிகள் ரயில்கள், இரண்டு விணிவிஹி ரயில்கள், ஐந்து ஞிணிவிஹி ரயில்கள் புதியதாய் இயக்கப்படும். 11 ரயில்களின் பயணத் தூரம் அதிகரிக்கப்படும். 
 
மதுரையிலிருந்து ஜெய்பூருக்கு பிரிமியம் ரயிலும், சென்னையிலிருந்து அகமதாபாத்திற்கு விரைவு ரயிலும் புதியதாக இயக்கப்படும். 
 
கன்னட எழுத்தாளர் மங்குட்டிம்மா கூறியதுபோல் நானும் கூறுகிறேன் ‘இந்த புத்தகம் படித்த பிறகு சந்தேகங்கள் உருவாகாமல் இருப்பதில்லை. குறைகள் சுட்டிக் காட்டினால் அவற்றைச் சரி செய்வதற்கு திறந்த மனமுடன் நான் இருக்கிறேன்‘.
 
ஜெய்ஹிந்த் !!!

இவ்வாறு ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உரையாற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்