தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியவர்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் தற்கொலை செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது.
அதன்படி, தற்கொலைக்கு முயன்று உயிர் தப்புபவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 309வது பிரிவின் படி ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும்.
ஏற்கனவே வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியால்தான் அவர்கள் மனம் உடைந்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். அவர்களுக்கு தண்டனை கொடுப்பதால் அவர்களின் மனநிலை மேலும் பாதிக்கப்படுகிறது.
இதனால் இந்த சட்டப் பிரிவை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசு, இந்த பரிந்துரையை ஏற்று தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்யுமா என்பது விரைவில் தெரியவரும்.