வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
பெரியவர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் 83 ஆண்/பெண்களிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இருப்பதால், பெரியவர்களின் மனோநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது.
குழந்தைகளின் பாதிப்புகளால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
மனோநிலை பாதிப்பு ஏதுமில்லாமல் உள்ள குழந்தைகளுடன் வசிப்போருக்கு எவ்வித மன அழுத்தமும் இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
சகோதரரோ அல்லது சகோதரியோ மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பாரேயானால், மற்றவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் ஏற்பட்டு விடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே மரபியல் ரீதியான மற்றும் சுற்றுப்புறவியல் பாதிப்புகளும் மன அழுத்தத்திற்கு வழிவகுப்பதாக தெரிய வந்துள்ளன.