விவசாயத்திற்கு பெரிதும் உதவிய சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக விவசாயிகள் கொண்டாடும் இந்த தைப் பொங்கலின் நாயகன் வேறு யாராக இருக்க முடியும் சூரியன்தான்.
விவசாயிகள் மட்டுமல்லாமல் உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் அடிப்படை சூரியன்தான். சூரியனே இல்லையென்றால் உலகம் என்பது உண்டா என்று கேட்க வேண்டியதே இல்லை.
சூரியனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். நாம்தான் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோமே... அதன் வெப்பத்தையும், சில சமயங்களில் உக்கிரத்தையும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
சரி சூரியனைப் பற்றி என்ன சொல்லலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.
சூரியனைப் பற்றி எத்தனையோ இருக்கின்றன. அதில் நாம் சொல்வது புதிதாகவும், பொருளுடையதாகவும் இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தேடியபோது கிடைத்ததுதான் இந்த தகவல்.
சூரிய நடுக்கம்!
சூரியன் என்பது 7 அடுக்குகளைக் கொண்டது. அதாவது வெங்காயத்தைப் போன்று ஒவ்வொரு வட்டப்பகுதியாக சூழப்பட்டுள்ளது.
webdunia photo
WD
மேலிருந்து சொல்லப்பட வேண்டுமானால் சூரியனின் அதிகப்படியான அனல் கதிர் வீச்சு மண்டலத்தை கரோனா என்று அழைக்கப்படுகிறது. இதுதான் சூரியனின் வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் மண்டலமாகும்.
முழு சூரிய கிரகணத்தின்போது மட்டுமே இந்த கரோனாவை நாம் பார்க்க அல்லது இருப்பதை உணர முடியும்.
சூரியனின் மேற்புறம் அதாவது நாம் பார்க்கும் சூரியப் பகுதி குரோமோஸ்பியர் எனப்படுகிறது. இதுதான் சூரியனின் வெப்பத்தை வெளியே உமிழும் பகுதியாகும்.
அதற்குள் இருக்கும் பகுதி போட்டோஸ்பியர் எனப்படுகிறது. அதனுள் இருப்பது சப்ஸர்பேஸ் ·ப்ளோஸ். பின்னர் கன்வெக்ஷன் ஸோன், ரேடியேக்டிவ் ஸோன் என சூரியனின் மைய உள் பகுதி கோர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாம் உணரும் அந்த வெப்பத்தின் துவக்கம் இந்த கோர் அமைப்பில் இருந்துதான் உருவாகிறது. அதாவது மையப் பகுதியில் இருந்து உண்டாகும் வெப்ப நிலை சுமார் 15,000,000 டிகிரி செல்சியஸ் முதல் 27,000,000 டிகிரி பாரன்ஹீட் வரையில் வெளிப்படுத்துகிறது. அதாவது ஒவ்வொரு முறையும் கோரில் இருந்து வெப்பம் வெளிவரும்போது ஒரு அணு குண்டை வெடித்ததற்கான தாக்கம் ஏற்படும்.
இந்த தாக்கம் அல்லது கதிர்வீச்சு சூரியனில் பெரும் நடுக்கத்தையே ஏற்படுத்துகிறது என்பது தற்போதைய கண்டுபிடிப்பாகும். ஒவ்வொரு முறையும் கோரில் இருந்து வெப்ப கதிர்வீச்சு வெளிப்படும்போது சூரியனின் அனைத்து பகுதிகளிலும் பல ஆயிரம் மடங்கு நில நடுக்கத்திற்கு ஒப்பான ஒரு தாக்கம் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த சூரிய நடுக்கத்தின்போது வெளியாகும் சக்தியை விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் ஒப்பிட்டுள்ளனர் என்று பார்த்தால், இந்த சக்தி சான் பிரான்சிஸ்கோவில் 1906ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைப்போன்று 40,000 மடங்கு அளவிற்கு இருக்கும். மேலும், அந்த சூரிய நடுக்கத்தின்போது வெளியாகும் சக்தி, அமெரிக்காவில் தற்போதைய பயன்பாட்டின் அடிப்படையில் 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய எரிசக்தி அளவிற்கு இருக்கும் அல்லது பூமியின் மையத்தில் சுமார் 11.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டால் எந்த பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவிற்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சூரியனின் மையப்பகுதியில் உருவாகும் இந்த அனல் கதிர் வீச்சி அலையலையாய் ஒவ்வொரு பிரிவையும் பயணித்து இறுதியாக குரோமோஸ்பியர் வந்தடைகிறது. அனல் கதிர்வீச்சு குரோமோஸ்பியரை அடையும்போது அனல் கற்றையாகவும், ஒளிப்பிழம்பாகவும் காணப்படுகிறது. இது வெளிப்படும் இடமே கரோனா.
கரோனாவைத் தாண்டி அதன் வெப்பம் விண் மண்டலத்தில் பரவுகிறது. அது பயணித்து பயணித்து நமது பூமிக்குள் ஊடுருவும் போது அதன் வீரியம் குறைந்து நம் மீது படும் வெயிலாக மாறுகிறது.
webdunia photo
WD
சரி சூரியனின் ஆயுள் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளது எவ்வளவு தெரியுமா? சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள். ஆம் வெறும் 4.6 பில்லியன் ஆண்டுகள்தான். அதாவது வரும் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு இதே நிலையில் தகித்துக் கொண்டிருக்கத் தேவையான எரிசக்தி சூரியனிடம் இப்போது இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 5 பில்லியன் ஆண்டுகள் கழித்து இந்த மிகப்பெரிய சிவப்பு சூரியன் ஒளி இழந்து நாம் காணும் சூரியனில் ஒன்றாகக் கூட ஆகிவிடலாம் என்கின்றனர். ஆனால் சூரியன் தனது முழு எரி சக்தியை இழந்து தணிந்த நிலையை அடைய அதிகம் ஒன்றுமில்லை சுமார் டிரில்லியன் (1 லட்சம் கோடி) ஆண்டுகள் ஆகுமாம்.