பொ‌ங்கு த‌மிழா!

சனி, 12 ஜனவரி 2008 (17:25 IST)
தை ‌பிற‌ந்தா‌ல் வ‌ழி ‌பிற‌க்‌கு‌ம்
எ‌ன்பதெ‌ல்லா‌ம் போ‌ய்,
தை ‌பிற‌ந்த மறுநா‌ள் முத‌‌ல்
போ‌ர் ‌பிற‌க்கு‌ம் எ‌ன்றா‌கி‌வி‌ட்டது
இல‌ங்கை‌த் த‌‌மிழ‌‌ன் வா‌ழ்‌வி‌ல்!

கால் நூற்றாண்டிற்கும் மேலாக
இ‌ன்ன‌ல்களுட‌ன் பொ‌ங்‌கி‌க் கொ‌ண்டி‌க்கு‌‌ம்
இல‌ங்கை‌த் த‌மிழ‌ன
எ‌ன்று காண‌ப் போ‌கிறா‌ன்
இ‌ன்ப‌‌ப் பொ‌ங்க‌ல்!

தை நன்னாளன்று தர‌ணியெ‌ங்கு‌ம்
பொங்கி மகிழும் தமிழா!

எத்தனையோ தை பிறந்தும்
இலங்கைத் தமிழர் வாழ்விற்கு
இன்னும் வழி பிறக்கவில்லை!

வான் வரை பொங்கியும்
வழியேற்படாத இனம் காக்க
கொஞ்சம் பொங்கு தமிழா பொங்கு!

எத்தனையோ தமிழ்ச் செல்வங்களை இழந்தும்
இன்னல் தீராது இங்கும் அங்குமாய்
இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் இனம் காக்க
கொஞ்சம் பொங்கு தமிழா பொங்கு!

வா‌ழ்வத‌ற்கு‌த்தா‌ன் ‌பிற‌ந்தோ‌ம்
‌‌வீ‌ழ்வத‌ற்கு அ‌ல்ல எ‌ன்று
கொ‌ஞ்ச‌ம் பொ‌ங்கு த‌மிழா பொ‌ங்கு!

நீ பொங்கினால்தான் பொங்குமஉண்மையான பொங்கல்!

வெப்துனியாவைப் படிக்கவும்