விரைவில் தமிழருடைய புத்தாண்டாக தை முதல் நாள்: கருணாநிதி!

சனி, 12 ஜனவரி 2008 (17:44 IST)
webdunia photoWD
தமிழருடைய புத்தாண்டு, தை முதல் நாள் என்பதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

`சென்னை சங்கமம்' நிகழ்ச்சியை முதலமைச்சர் கருணாநிதி துவ‌க்‌கி வை‌த்தபேசுகை‌யி‌ல், கடந்த ஆண்டு இந்த விழா துவ‌ங்‌கிபோது, துவ‌க்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இங்கு `தப்பாட்டம்' நிகழ்ச்சி நடந்தது. தமுக்கு என்ற கருவியே மருவி தப்பு என்று அழைக்கப்படுகிறது. அதைக் கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சி தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது தப்பான ஆட்டம் அல்ல. சரியான ஆட்டம். நம்முடைய பண்பாடு, கலை, கலாசாரம், பழக்க வழக்கம், இலக்கியம், வரலாறு, இன எழுச்சி இவை அத்தனையும் இந்த விழாவின் மூலமாக எடுத்துக் காட்டப்படுவதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் விடியற்காலையில் யோகா பயின்று வருகிறேன். யோகா பயிற்சியைத் தொடங்கும்போது வடமொழியில், `நாராயணா நமகா' என்று சொல்லச் சொன்னார். அவருடைய ஆன்மிக உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது, அதே நேரத்தில் பயிற்சியையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், `நாராயணா நமகா' என்று சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள். நீங்கள் இதனை தமிழில் சொன்னால் என்ன? என்று கேட்டேன்.

இந்த பயிற்சிக்கு இந்த சொற்கள்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதற்கு நாராயணா என்றால் என்ன என்று நான் கே‌ட்டேன். அவர் சூரியனை குறிப்பிடுகிறேன் என்றார். இப்போது கூட பழக்கத்தில் சூரிய நாராயணன் என்று சொல்வதில்லையா? அதைப் போல சூரியனைத்தான் அவர் குறிப்பிட்டு `நாராயணா நமகா' என்று சொல்ல வேண்டும் என்றார். அதன்பிறகு நான் சிந்தித்து, ஞாயிறு என்றால் சூரியன். நீங்கள் சூரிய வணக்கத்தை `நாராயணா நமகா' என்று சொல்கிறீர்கள். அதையே ஞாயிறு போற்றுதும் என்று சொன்னால் என்ன என்று கேட்டேன். அவர் அதை முணுமுணுத்துப் பார்த்து, நன்றாக இருக்கிறது அதையே வைத்துக் கொள்ளலாம் என்றார். இப்போது, வகுப்பின்போது ஞாயிறு போற்றுதும் என்றுதான் சொல்கிறேன். அதனால் இந்த ஞாயிறு என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறவேண்டும். இது பொங்கல் திருநாளை நினைவூட்டும் வகையில் நடைபெறவேண்டும். பொங்கல் திருநாளை நினைவூட்டும்போது தமிழனை நினைவூட்டும் வகையில் அமையவேண்டும். இது தமிழர் திருநாள். சரியாக சொல்லவேண்டுமானால், 500 புலவர்கள் ஒன்று கூடி, தமிழனுடைய புத்தாண்டு தை முதல் நாள்தான் என்று கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதையும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்ற நாள் விரைவில் வரும் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்