போட்டியில் பங்கு பெறாமலே அழகிப் பட்டம்

செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (01:38 IST)
இன்றைய இளைய கவிஞர்களும் சரி, அந்த காலத்து புலவர்களும் சரி, காதல் என்றால் கவிதைகளை மழையாக பொழிந்துவிடுகிறாகள். அதுவும் சுவையாக. இனி ஒரு காதல் கவிதையை சுவைப்போம் மிக அழகாக.
 

 
மழை பெய்யாமலே மண் 
 
வாசம் வருகிறது...!
 
உன் பாதம் மண்ணில் 
 
பட்டவுடன்...!
 
உன் மவுனம் தான்
 
உனக்கு அழகு என்றேன்
 
அதனால், 
 
சிலையாகவே மாறிப்போனாய்
 
எனக்காக...!
 
போட்டியில் பங்கு
 
பெறாமலே அழகிப்
 
பட்டம் வென்றுவிட்டாய் 
 
என்னிடம்...!
 
நமது திருமணத்திற்கு
 
துணைப் பெண்ணாய் 
 
அந்த நிலவையே 
 
அழைக்கிறேன்....!
 
உன் அழகிற்கு
 
இணையாக...!
 
-: ரா.பிரவீன் குமார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்