எனக்கு இரண்டு காதலிகள்

வியாழன், 12 நவம்பர் 2015 (19:17 IST)
ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்
 
இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
 
உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்
 

 
அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................
அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்
 
உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
...................................
உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
 
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
......................................
நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
 
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்..

தபு சங்கர் கவிதைகளில் இருந்து....

வெப்துனியாவைப் படிக்கவும்