காதல் கவிதைகள்

திங்கள், 28 செப்டம்பர் 2015 (15:03 IST)
காலமெல்லாம் இழந்து விட்டேன் உன் கண்கள் எனைக் காணும் நேரம் பார்த்து,
நேரமெல்லாம் இழந்து விட்டேன் உனை சேரும் நாளை நினைத்துப் பார்த்து,
உயிரற்ற உடலாய் நின்று விட்டேன் நீ வேறொருவன் கையை பிடித்த போது,
இழந்த உயிரை திரும்பப்பெற்றேன் நீ பிடித்தது உன் அண்ணன் கை என்பதை அறிந்த போது
-------------------------
 
 


என் தேர்வுகள் வெற்றியின்றியே போனது, என் எழுதுகோல் உனைப் பற்றியே எழுதுவதனாலே,
என் நண்பர்களும் எனை வெறுத்து விட்டனர், என் பேச்சுக்கள் உனை பற்றியே ஆனதனாலே,
என் கண்களும் கலையிழந்துப் போனது,உள்ளம் பிழிவதை அது பொழிவதனாலே,
என் வெற்றிகளும் தோல்விகளாய்த் தோன்றுதே, என் காதலை நீ ஏற்காமல் மறுத்ததனாலே.
என்றும்..காதலுடன்...........
 
-----------------------
 
உயிரோடு உயிரானவளே, உள்ளத்தில் நிறைந்திருப்பவளே,
உதிரத்தில் கலந்திருப்பவளே, உணர்வுக்கு உயிரூட்டுபவளே,
சுவாசத்திற்கு வாசம் தருபவளே, என் நேசத்திற்கு உன் நேசம் தருவாயா?
இல்லை,
நான் பழகியது நட்பே என்பாயா?
நட்பு என்றால் உன் திருமணம் வரை,
காதல் என்றால் நம் கல்லறை வரை,
நான் காத்திருப்பேன் என் உயிர் பிரியும் வரை.
 
------------------------------------
 
காத்திருப்பதும் கால்கடுக்க நிற்பதும் கடமையானது என் கண்ணே,
எதிர்பார்ப்பதும் ஏமாந்து போவதும் வழமை ஆனது என் அன்பே,
பார்த்து விட்ட நாட்களில் பரவசப் படுவதும்,
பார்க்காத நாட்களில் பரிதவித்து நிற்பதும் பழகிப்போனது என் உயிரே,
என் காதல் ஒன்றும் கண்ணாடி அல்ல, நீ குத்தினால் உடைவதற்கு,
அது என் "கண்" அடி..
நீ குத்தினாலும், குத்திய உன் கைகளுக்காக கண்ணீர் சிந்துவேன்..
.......உன் நினைவில் உயிர் வாழும்.

வெப்துனியாவைப் படிக்கவும்