திருத்தொண்டன் நான்புரியும் திருபூஜை தன்னை மனங்கொண்டு ஏற்றிடுவாய் கவிகாக்கும் அன்னை வீருகொண்டு கவியேற்றும் சிறுபிள்ளை என்னை கூறுகண்டு போற்றிடுவாய் கலைமகளே என்னை
ஒளியெல்லாம் உன்போல ஒளிராது என்றும் ஒலியெல்லாம் உனைபோல ஒலிக்காது இன்றும் மொழியெல்லாம் உன்போல இனிக்காது என்றும் கலைச்செல்வி உன்புகழோ அழியாது என்றும்
வானம்வரை அடுக்கிடுவேன் நான்வடிக்கும் நூலை வாழும்வரை தொடுத்திடுவேன் நாதனது வேலை வாடும்வரை கொடுத்திடுவேன் உனக்கான நாளை வாழ்த்திடநீ வந்துவிடு தினந்தோறும் காலை