கோவை பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று சர்வ மதத்தினர் பிரார்த்தனை செய்தனர்.
கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் மிகவும் அமைதியான சூழலில் அமைக்கப்பட்டுள்ளது ஈஷா யோகா மையம். இங்கு தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தியானப் பயிற்சியின் உருவாக தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
தியான லிஙகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட 10ஆம் ஆண்டு விழாவையொட்டி, மத நல்லிணக்க தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தியான லிங்கம் முன்பு சர்வ மதத்தினர் பிரார்த்தனை செய்தார்கள்.
இந்த தியான லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் மனதில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.