யுகாதி பச்சடியின் தத்துவம்

செவ்வாய், 24 மார்ச் 2009 (12:00 IST)
யுகாதி அன்று அறுசுவை (ஆறு சுவைகள்) கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள்.

வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து இது செய்யப்படுகிறது.

இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் கொண்டுதான் இருக்கும். மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல. துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று உணர்த்தும் வகையில் யுகாதி பச்சடி அமையும்.

யுகாதி பண்டிகை அன்றுதான் பிரம்மா உலகத்தைப் படைத்ததாகக் கூறுவார்கள். அதனால் அன்றைய தினம் புதிய வேலை, கல்வி, தொழில் போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்