ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:58 IST)
இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க் கதை உ‌ண்டு. அதை த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌ர்களு‌க்காக வழ‌ங்கு‌கிறோ‌ம்.

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.

கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொரு‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்