×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
51 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்த புத்தகங்கள்
செவ்வாய், 17 நவம்பர் 2009 (12:23 IST)
நாம் எத்தனையோ பேர் நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வந்து படித்துவிட்டு திரும்பி கொடுக்கும் பழக்கத்தை வைத்துள்ளோம். சிலர், இதுபோன்று நூலகங்களில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களை திருப்பிக் கொடுக்காமல் தன்னுடனேயே வைத்துக் கொள்வதும் உண்டு.
webdunia photo
WD
ஆனால் இதில் சற்று வித்தியாசமாக ஒருவர், தான் நூலகத்தில் இருந்து சுமார் 51 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து வந்த இரண்டு புத்தகங்களை பத்திரமாக தபாலில் அனுப்பியுள்ளார். இது என்ன பெரிய விஷயமா? என்பவர்களுக்கு மற்றொரு சுவையான விஷயம் உள்ளது. என்னவென்றால், 51 ஆண்டுகளுக்குமான அபராதத் தொகையும் மணி ஆர்டரில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள போனிக்ஸ் நகரின் கேமல்பேக் உயர்நிலைப் பள்ளி நூலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த நூலகத்தின் பொறுப்பாளர் ஜார்ஜெட் பார்டைன் கூறுகையில், நேற்று முன்தினம் நூலகத்திற்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலில் 2 புத்தகங்கள் இருந்தன. அவை 1959ஆம் ஆண்டு நூலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டவை. அத்துடன் ஒரு கடிதமும், ரூ.47,000க்கான மணி ஆர்டரும் இருந்தது.
அந்த கடிதத்தில், இந்த புத்தகத்தை எடுத்த மாணவரது குடும்பத்தினர்தான் இந்த புத்தகங்களை திருப்பி அனுப்பியிருப்பது தெரிய வந்தது.
கடிதத்தில், இந்த புத்தகங்களை இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் 51 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றதாகவும், அப்போது, அவர்கள் வீடு மாறி வேறு மாகாணத்திற்குச் சென்றுவிட்டதால் அப்போது அந்த புத்தகங்கள் நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க முடியாமல் போய் விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போது பரணில் இருந்து அவற்றை எடுத்த, அந்த மாணவனது குடும்பத்தினர், அப்போதைய ஒரு நாள் அபராதத் தொகையைக் 51 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டு மணி ஆர்டரில் அனுப்பியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தினசரி 2 சென்ட் என்றாலும் 51 ஆண்டுகளில் அபராதத் தொகை ரூ.35,000 தான் ஆகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் அபராதத் தொகை அதிகரித்திருக்கலாம் என்பதால் 47,000 அனுப்பியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணத்தில் பல புதிய புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைக்கப்போவதாக ஜார்ஜெட் பார்டைன் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!
எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!
ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?
ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
செயலியில் பார்க்க
x