மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதியு அந்த உயில், கடந்த 1940-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி எழுதப்பட்டுள்ளது.
அதாவது, "எனது பொருள்களை சொந்தம் கொண்டாடுவதற்கான சட்டப்பூர்வ உரிமை நவ ஜீவன் அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு" என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு சொத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தாலும், நமது சமூக வழக்கப்படியோ அல்லது சட்டத் தேவைக்காகவோ எனக்குச் சொந்தமான அசையும், அசையா பொருள்கள், நான் எழுதிய புத்தகங்கள் அல்லது இனி எழுதவிருக்கும் புத்தகங்கள் - அது அச்சிடப்பட்டிருந்தாலும் அச்சிடப்படாமல் இருந்தாலும் அவை யாவும் நவ ஜீவன் அறக்கட்டளைக்கே சொந்தம்" என்று உயிலில் அவர் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
பியார் லால் நாயர், கிஷோர்லால் ஜி மாஷ்ருவாலா ஆகிய இருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டுள்ளனர்.
நவஜீவன் அறக்கட்டளை 1929-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காந்தியால் நிறுவப்பட்டது.
காந்தியின் பொருள்கள் தங்களுக்கே சொந்தம் என்று நவஜீவன் அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் பொருள்களை சட்டப்படி விலை கொடுத்து வாங்க வழியே இல்லை. சட்டவிரோதமாகவே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அறக்கட்டளை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.