செப்டம்பர் 2021 - 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

புதன், 1 செப்டம்பர் 2021 (15:18 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
உழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த மாதம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. குடும்பத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு பண வரவு இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
 
பரிகாரம்: மாரியம்மனை சனிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்