செப்டம்பர் 2021 - 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

புதன், 1 செப்டம்பர் 2021 (15:05 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
நல்லவர், கெட்டவர் என்று பாராமல் எல்லோரிடமும் நாசூக்காக நடந்து கொள்ளும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண்  பெற அதிக நேரம் படிப்பது நல்லது.
 
பரிகாரம்: வியாழகிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்