அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும்.
முன்கோபத்தை குறையுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். யோகா, தியானம் செய்வது நல்லது. சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதிஷ்ட தேதிகள்: 2, 7, 6, 11
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி