மே 2022 - 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

வியாழன், 5 மே 2022 (10:22 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
தந்திரமாக எதையும் செய்யும் நான்காம் எண் அன்பர்களே நீங்கள் மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர். இந்த மாதம் சுப பலன்கள் உண்டாகும்.  எடுத்தகாரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து  செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.
 
பரிகாரம்: தினமும் மாலையில் அம்மனை வணங்கிணால்  மனதெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்