மே 2022 - 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

வியாழன், 5 மே 2022 (10:18 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்களை செய்யும் குணமுடைய இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்த சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும்.

உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்