ஜூலை 2021 - 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

வெள்ளி, 2 ஜூலை 2021 (15:05 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே! உங்களது கருத்துக்கு  மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.  தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். பெண்கள் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும். 
 
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்