ஜூலை 2021 - 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

வெள்ளி, 2 ஜூலை 2021 (15:02 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றிபெறும் ஒன்றாம் எண் அன்பர்களே! இந்த மாதம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து  திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும்.

வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. 
 
பரிகாரம்:  முருகனை அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்