ஆண்டு வருமான வரி செலுத்துவதற்கு இதுவரை நடைமுறையில் இருந்த சரால் படிவத்திற்கு மாற்றாக 2எஃப் எனும் புதிய படிவத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது!
டெல்லியில் புதிய பவடித்தை அறிமுகம் செய்த மத்திய அரசின் வருவாய்த்துறை செயலர் கே.எம். சந்திரசேகர், இந்தப் புதிய படிவம், விவரங்களை அளிப்பதற்கு சுலபமானதாகவும், அதே நேரத்தில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வருமாய் மற்றும் செலவினங்களை முறையாக அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதுவரை கடைபிடிக்கப்படாத வகையில், குறிப்பாக ஒரு தனி நபரின் செலவின விவரங்களை பெறும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படிவத்தில் தனி நபரின் துவக்க இருப்பில் (Opening Balance) இருந்து ஆரம்பித்து, அவருக்கு வரும் ரொக்க வருவாய் விவரங்களைப் பெற்று, செலவினங்களின் விவரங்களை பதிவு செய்து இறுதியாக முடிவு இருப்பில் (Closing Balance) நிறைவு பெறுகிறது.
செலவினங்களும், வரி விலக்கு பெறும் முதலீடு விவரங்களும் அளிக்கப்படும வகையில் இந்தப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சந்திரசேகர் கூறினார்.
இந்த ஆண்டில் இப்படிவத்தை கணினியின் வாயிலாகவோ அல்லது காகிதப் படிவத்தின் வாயிலாகவோ பயன்படுத்தலாம் என்று கூறிய சந்திரசேகர், அடுத்த ஆண்டு முதல் கணினியில் மட்டுமே இப்படிவத்தைக் கண்டு நிறைவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.