துபாயில் 55,000 பேர் வேலை இழந்தனர்

வியாழன், 12 பிப்ரவரி 2009 (11:47 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக 55 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் பாதித்த பொருளாதார வீழ்ச்சி, அரபு நாடுகளையும் ‌வி‌ட்டு‌‌விட ‌வி‌ல்லை. இதனா‌ல் பல ‌நிறுவன‌ங்க‌ள் த‌ங்களது ஊ‌ழிய‌ர்களை வெ‌ளியே‌ற்‌றியது. இதனா‌ல் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக 55 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்.

கட‌ந்த மாத‌த்‌தி‌ல் மட்டும் 54 ஆயிரத்து 684 குடி‌யிரு‌ப்பு விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனா‌ல் ப‌ணியா‌ற்றுவத‌ற்காக அரபு நாடுக‌ளி‌ல் குடியேறி இரு‌ந்த அ‌த்தனை பேரு‌ம் உடனடியாக அ‌ந்த நா‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

வேலை இழ‌ந்த 55ஆ‌யிர‌ம் பே‌ரி‌ல் 20 ஆ‌யிர‌ம் பே‌ர் இ‌ந்‌திய‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்