'அரபு நாடுகளில் இந்தியர்கள்' என்ற தலைப்பிலான அயல்நாடு வாழ் இந்தியர்கள் மாநாடு கோவாவில் உள்ள பனாஜி நகரில் வரும் 29-ம் தேதி நடக்க உள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை நடத்தும் இந்த மாநாட்டினை அமைச்சர் வயலார் ரவி துவக்கி வைக்கிறார். முதல்வர் திகம்பார் காமத், முதன்மை செயலர் ஜே.பி. சிங் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்வில், அரபு நாடுகளில் வாழும் கோவாவை சேர்ந்த சில தலைவர்களுக்கு சேவை விருது வழங்கப்பட உள்ளது. குடியேற்ற முறைகள், வசதிகள் போன்ற தகவல்கள் அடங்கிய புத்தகம் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை ஆணையர் எடுவர்டோ ஃபலேய்ரோ சமீபத்தில் அரபு நாடுகளிடம் சமர்ப்பித்த திட்ட நடவடிக்கை அறிக்கை மாநாட்டில் பங்கேற்கும் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
மார்ச் 29-ம் தேதி மாலை 3.00 மணிக்கு பனாஜியில் உள்ள ஹோட்டல் மன்டோவியில் இந்த மாநாடு துவங்குகிறது.