ஐக்கிய அரபு குடியரசு விசா கட்டணத்தை உயர்த்தியது!
செவ்வாய், 27 மே 2008 (19:19 IST)
விசா அனுமதிக்கான கட்டணத்தை ஐக்கிய அரபு குடியரசு உயர்த்தியுள்ளது. புதிய கட்டண விகிதம் வருகிற ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.
அயல்நாட்டவர்கள் ஐக்கிய அரபு குடியரசில் ஒரு மாதம் தங்குவதற்கான விசா கட்டணம் 200 தினாரில் இருந்து 500 தினாராக உயர்த்தப்படுகிறது. 3 மாதங்களுக்கான விசா கட்டணம் 700 தினாரில் இருந்து 1,000 தினாராக உயர்த்தப்படுகிறது.
புதிதாக 6 மாதங்களுக்கான விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2,000 தினார் கட்டணத்துடன் கூடிய இந்த விசா பெற்றால், இடையில் எத்தனை முறை வேண்டுமானாலும் சொந்த நாட்டிற்குச் சென்று வரலாம்.
நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இந்த 6 மாத விசாவைப் பெறலாம். தொழிலாளர்களை இந்த விசா மூலம் அழைத்துச்செல்ல முடியாது.
ஆனால், சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள், ஐக்கிய அரபு நாடுகளில் குடியிருப்போரின் உறவினர்களுக்கு இந்த விசா வழங்கப்படும்.