அமெரிக்காவின் மிச்சிகனில் வாழும் இந்திய டாக்டர் ஜஸ்வந்த் சிங் மொபைல் நூலகம் ஒன்றை பஞ்சாபில் துவக்கியுள்ளார். டாக்டர் ஜஸ்வந்த், தன் தகப்பனாரின் நினைவாக ஆனந்த் மெமோரியல் சர்வீஸ் ட்ரஸ்ட் என்ற சேவை நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் தனது சொந்த மண்ணான பஞ்சாபில் பல சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளார். அதன் முதற் கட்டமாக முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் ஒரு நடமாடும் நூலகம் ஒன்றை துவக்கியுள்ளார்.
இந்த நடமாடும் நூலகத்திற்கான பேருந்துக்கு டாக்டர் ஜஸ்வந்த் 22 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இதன் ஒரு வருட ஓட்ட செலவு நான்கு லட்சம் வரை ஆகும் என்றார்.
இந்த நடமாடும் நூலகம் பஞ்சாபின் கிராமங்களை சுற்றி வர இருக்கிறது. நான்கு கிராமங்களை சேர்ந்த சுமார் 10000 மக்கள் இந்த நூலகத்தால் பயன் பெறுவர் என்றும் டாக்டர் ஜஸ்வந்த் தெரிவித்தார்.