அயல்நாடு வாழ் இந்தியர் யார்?

இந்தியாவில் பிறந்து வாழ்ந்துவரும் இந்திய குடிமகன் ஒருவர் தொழில் செய்யவோ, பணியாற்றவோ, பயிற்சிக்காகவோ வெளிநாடு சென்று காலவரையின்றி அங்கு இருந்துவரும் காலத்தில் அவரை அயல்நாடு வாழ் இந்தியர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்காகவோ அல்லது மத்திய - மாநில அரசுகளின் பணிநிமித்தம் தொடர்பாகவோ, மத்திய - மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர் காலவரையற்ற (Non Temporary) பணியின் காரணமாகவோ வெளிநாட்டில் சென்று இருந்திடும் காலத்தில் அவர்களும் அயல்நாடு வாழ் இந்தியர் எனும் வரையறைக்குள் வருகின்றனர்.

இந்தியாவில் பிறந்து வேறொரு நாட்டின் குடிமகனாக (Persons of Indian Origin) இருந்தாலும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் பெறுகின்ற அதே நிலை அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்